மன்னர் வகையறாவுக்காக 5 கோடி? தயாரிப்பாளரை ஏமாற்றி நடுத்தெருவுக்கு கொண்டு வந்த நடிகர்..
vimal
producer Gopi
By Edward
தமிழ் சினிமாவில் களவாணி, வாகை சூடவா, மஞ்சப்பை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். பல படங்கள் தோல்வியை சந்தித்து மிகப்பெரிய இடத்தினை தவரவிட்டு வந்த விமல் சமீபத்தில் விலங்கு வெப்சீரிஸ் படத்தில் நடித்து மக்கள் மனதை ஈர்த்தார்.
நல்ல விமர்சனங்களும் கிடைத்த இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார் விமல். இந்நிலையில் தன்னிடம் 5 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றி நடுத்தெருவிற்கு கொண்டு வந்ததாக தயாரிப்பாளர் கோபி போலிசாரிடம் புகாரளித்துள்ளார்.
மன்னர் வகையாறா என்ற படத்திற்காக என்னிடம் கெஞ்சி 5 கோடி ரூபாய் வாங்கி சென்றார். 2016ல் வாங்கிய அப்பணத்தினை கொடுக்கிறேன் என்று எழுத்து பூர்வமாக பணத்தை கொடுக்கிறேன் என்று கூறி இத்தனை ஆண்டுகளாக என்னை ஏமாற்றி பண மோசடி செய்து வருவதாக புகார் அளித்துள்ளார்.

