அவரோட என் பொண்ண நடிக்க விடமாட்டேன்? தயாரிப்பாளரால் தனுஷ்க்கு நடந்த அவமானம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். மாறன் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. திருச்சிற்றம்பலம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் தனுஷ் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் இயக்கத்திலும் கவனம் செலுத்தவுள்ளார் என்ற செய்தியும் வெளியானது. அப்படத்தில் இயக்கி நடிக்கவுள்ள தனுஷுக்கு யார் ஜோடி என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பாலிவுட் நடிகையும் போனி கபூரின் மகள் ஜான்வி கபூரின் பெயர் அடிபட்டுள்ளது.
தமிழ் படங்களில் நடிக்க ஜான்வி கபூர் விருப்பத்துடன் இருப்பதாகவும் இதனால் தான் தனுஷ் அவர் பக்கம் சென்றிருக்கிறார். தன் மனைவி ஸ்ரீதேவி அளவிற்கு தன் மகள்களை உயரத்திற்கு கொண்டு செல்ல போனி கபூரும் முயற்சி செய்து வருகிறார்.
அப்படி தனுஷ் ஜான்வி கபூரை இயக்கும் படத்தில் நடிக்க வைக்கவுள்ளதை அறிந்த போனி கபூர் வேண்டவே வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம். இதற்கு காரணம் தனுஷ் விவாகரத்து செய்திதானாம்.
ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததால் ரஜினிகாந்திற்கு தனுஷிற்கும் இடையொல் கருத்து வேறுபாடு தோன்றி இருக்கிறது. இதனால் தனுஷிற்கு வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்துவிட்டதாம்.
இதனை அறிந்து கொண்ட போனிகபூர் தன் மகளை தனுஷுடன் சேர்ந்து நடிக்க வைத்தால் ஜான்வி கபூரின் கெரியர் பாதிக்கப்படும் என்பதை அறிந்து தனுஷுடன் நடிக்க வைக்க முட்டுக்கட்டையாக இருக்கிறாராம். தன் மகளின் கேரியரில் கவனம் செலுத்துவதால் தான் போனி கபூர் தனுஷுடன் நடிக்க வைக்க விரும்பவில்லையாம்.