பொறாமையில் ஏ ஆர் முருகதாஸை கடத்திய தயாரிப்பாளர்!! 10 நிமிடத்தில் மீட்டெடுத்த பிரபல நடிகை..
முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், பல ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற போது பல விசயங்களை பகிர்ந்து கொண்டார் முருகதாஸ். இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன், முருகதாஸ் கடத்தப்பட்ட சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், கஜினி படம் ஆரம்பிக்கும் போது குறைவான பட்ஜெட்டில் எடுக்கலாம் என்று கூறிய முருகதாஸ், போகப்போக 13 கோடி வரை இழுத்துவிட்டு தயாரிப்பாளருக்கு செலவை கொடுத்திருக்கிறார். அப்போது சூர்யா மார்க்கெட் இல்லை என்பட்கால் அப்படத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருகிறது. சூர்யாவுக்கு சம்பள பாக்கியாக 20 லட்சம் தரவேண்டியிருப்பதால், படத்தின் இந்தி டைட்ஸ்க்கு குறைவான தொகையில் விற்று சம்பள பாக்கியை செட்டில் செய்துள்ளார் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர்.
அதன்பின் படம் சூப்பர் பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தது. இந்தியில் இதே படத்தினை முருகதாஸ் தான் இயக்க முடிவெடுத்தார். இதையறிந்த தயாரிப்பாளர் இந்தியில் சொர்ப்ப விலைக்கு விற்றதால் கடும் கோபத்தில் இருந்துள்ளார். அதற்கு காரணம் தமிழில் இப்படியொரு பட்ஜெட்டே, சூப்பர் ஹிட் ஆகியது. பாலிவுட் போனால் அதன் பட்ஜெட் அதிகமாகுமே என்று நினைத்திருக்கிறார்.

முருகதாஸ் தன்னை ஏமாற்றி, அவரும் நண்பர்களும் இந்தி டைர்ஸ்-ஐ விற்றுவிட்டார்கள். தற்போது அதன் டைர்ஸ் என்னிடம் தான் இருக்கிறது என்று புகாரளித்துள்ளார். அப்போது எழுத்தாளர் சுஜாத மரணத்தின் போது ஏ ஆர் முருகதாஸ் சென்றுள்ளார். அப்போது நான்கு பேர் கொண்ட நபர்கள் முருகதாஸை காரில் கடத்தி சென்றுவிட்டார்கள். இந்த விசயம் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் செல்ல ராதிகா கவனத்திற்கு சென்றுள்ளது.
உடனே அப்போதைய ஆளும் கட்சியில் இருந்த மறைந்த கருணாநிதிக்கு கால் செய்திருக்கிறார் நடிகை ராதிகா. ஏ ஆர் முருகதாஸை காப்பாற்றித்தரும் படி கேட்டுக்கொண்ட ராதிகா கால் செய்த சில நிமிடத்தில் அந்த காரை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
முருகதாஸை கடத்திச்சென்றது ரவுடிகள் இல்லை என்றும் கடத்தி சென்றது காவலர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது தயாரிப்பாளர் சந்திரசேகர் தான் கடத்தியிருப்பது தெரிந்து அந்த பிரச்சனையை நடிகை ராதிகா முடித்திருக்கிறார்.