பாலாவின் விவாகரத்துக்கு காரணமே என் சாபம் தான்!! வயித்தெரிச்சலில் தயாரிப்பாளர் கூறிய உண்மை..
மனைவி விவாகரத்து, படங்கள் அமையாமல் போனது, சூர்யா கழட்டிவிட்டது என்று பல பிரச்சனைகளுக்கெல்லாம் நான் விட்ட சாபம் தான் என்று ஒரு தயாரிப்பாளர் கூறியுள்ளார். நான் கடவுள் படத்தில் ஆர்யாவின் அப்பாவாக அழகன் தமிழ்மணி நடித்திருப்பார்.
ஆரம்பத்தில் தயாரிப்பாளராக மலையாளத்தில் பல படங்களை தயாரித்திருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், அப்படி நான் கடவுள் படத்தில் நடிக்க பாலா கேட்டதும், எனக்கு நடிப்பு வராது என்று கூறியிருக்கிறார். ஆனால், பாலா அழகன் தமிழ்மணி வற்புறுத்தி நடிக்க கேட்டதால் நடித்தேன்.

அப்போது நடிப்பு வரவில்லை என்று பலமுறை கேவலமாக நடந்து கொண்டார். அதுக்கூட பரவாயில்லை என் அம்மா இறப்பிற்கு சடங்கு செய்ய மொட்டை தாடி எடுக்கனும் என்று பாலாவிடம் கேட்டேன்.
அதற்கு பாலா, ஏற்கனவே படம் 3 வருஷமாக போய்ட்டு இருக்கு. இதில் நீங்கள் மொட்டை அடித்தால் இன்னும் 3 வருஷம் ஆகும், அதற்கு ஓகே என்றால் செய்யுங்கள் என்று கூறினார். இதனால் என் அம்மாவின் இறுதி சடங்கை கூட செய்யவிடாமல் பாலா என்னை கொடுமைப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.
இதனால் அவரை, நீ நல்லாவே ஒருக்கமாட்ட, நாசமா போய்விடுவ என்று வயிறு எரிந்து சாபம் விட்டுள்ளார். என் சாபம் தான் மனைவியுடன் விவாகரத்து என பல கொடுமைகளை பாலா சந்தித்து வருகிறார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் அழகன் தமிழ்மணி.