5 நிமிடத்தில் இத்தனை லட்சமா!! கைல காசு வாங்கிட்டேன்னு நடிகை ஸ்ரேயா சரண் செய்த செயல்..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க கவனம் செலுத்தி கமிட்டாகி வருகிறார். சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்வதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயா சரண் சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். சமீபகாலமாக தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் ஸ்ரேயா சரண், வடிவேலுவுடன் ஆட்டம் போட்டதால் தான் மார்க்கெட்டை தமிழில் இழந்தார் என்ற விமர்சனம் எழுந்து வந்தது.
இந்நிலையில் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஸ்ரேயா சரண் கமிட்டாகியது பற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார். அதில், பல கோடியில் செட் போட்டு இந்திரலோகம் ஷூட்டிங் எடுத்து எடிட் பண்ணி பார்த்தா, எடிட்டர் காமெடியே இல்லை என்று கூறினான். காமெடி படத்தில் காமெடி இல்லன்னா எப்படி என்று வடிவேலுவை கூப்பிட்டு கேட்டேன்.
அடக்கவுடக்கமாக இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவா இது!! கிளாமரில் இப்படியொரு புகைப்படங்கள்..
அதற்கு வடிவேலு முதலாளி கவலையே படாதீங்க இந்திரலோகம், எமலோகம், பூலோகம்னு இருக்கு எமலோகத்தில் காமெடி வந்துடும் என்று சொல்லிவிட்டார். அதுக்கும் கோடியில் செலவு செய்து ஷூட் எடுக்கிறோம். எல்லாம் பண்ணுறாங்க, எடிட் பண்ணும் போது காமெடி இல்லை. பெரியளவில் படம் போகாது என்பதால் பூலோகம் ஷூட் எடுக்கும் போது ஸ்ரேயா சரணை கேட்கிறான் வடிவேலு.
ஸ்ரேயாவுக்கு டேட் பார்த்த சதீஷ் எனக்கு நெருக்கம் என்பதால் அவரிடம் பேசி ஒத்துக்கொள்ள வைத்திருக்கிறார். அந்த சமயத்தில் விக்ரம் நடிக்கும் கந்தசாமி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா சரண் நடிக்கிறார். உன் இமேஜ் போய்விடும் என்று எல்லோரும் ஸ்ரேயாவை பயமுறுத்துகிறார்கள்.
ஆனால் ஸ்ரேயா நான் காசு கைநீட்டி வாங்கிவிட்டேன் டான்ஸ் ஆடி கொடுப்பேன் என்று அந்த பொண்ணு சொல்லிவிட்டது என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடித்த ஸ்ரேயா சரண், அதன்பின் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய மார்க்கெட்டை அதன்பின் தமிழில் இழந்து தெலுங்கு, இந்தி பக்கம் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.