சுயநலம் இல்லாத மனுஷன்.. வார்த்தைக்கு வார்த்தை விஜயகாந்தை புகழ்ந்து தள்ளிய பிரபலம்

Vijayakanth Tamil Cinema
By Edward May 15, 2022 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். அப்படி கூப்பிடுவதை விட கேப்டன் விஜயகாந்த் என்று கூறுவதுதான் தமிழக மக்களுக்கு பிடித்தமான பெயர். அப்படி கம்பீரத்தின் உச்சியை தொட்ட நடிகராக தமிழ் சினிமாவில் அரசியல் பிரவேசத்திலும் சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் அவர்கள்.

அப்படி இருந்த மனிதர் சமீப ஆண்டுகளாக ஏற்பட்ட உடல் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அதிலிருந்து விடுபட்டு வந்த புகைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இவரைப் பற்றி தயாரிப்பாளர் சிவா ஒரு பேட்டியில் புகழ்ந்து பேசியுள்ளார்.

பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, விஜயகாந்த் கிட்டத்தட்ட 175 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அந்த படங்கள் அனைத்திலும் அவர் சம்பள விஷயத்தில் எந்த கெடுபிடியும் காட்டியது கிடையாது.

அந்த அளவிற்கு தயாரிப்பாளர்களுக்கு அவர் உதவி செய்வார். பல நடிகர்கள் சக நடிகர்கள் வளர்ந்து வருவதை பொறாமையுடன் பார்க்கின்றனர். ஆனால் விஜயகாந்த் அப்படி கிடையாது.

ஒரு பெரிய நடிகராக ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டிருந்தாலும் அவர் வளரும் நடிகர்கள் முன்னேற வேண்டும் என்று நினைக்கூடிய மனிதர். அப்படித்தான் வளரும் நடிகராக இருந்த விஜய்யுடன் இணைந்து செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் நடித்தார்.

அதுமட்டுமல்லாமல் அப்போது பெரிய அளவில் வெற்றி திரைப்படங்களை கொடுக்க முடியாமல் திணறி வந்த நடிகர் சூர்யாவுடன் இணைந்து பெரியண்ணா திரைப்படத்திலும் நடித்து அவர்களின் வளர்ச்சியில் ஒரு பங்கினை ஆற்றினார்.

வளரும் கதாநாயகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதிலும், அவர்களை வளர்த்து விடுவதிலும் விஜயகாந்த் நிறையவே அக்கறை காட்டி இருக்கிறார்.

மேலும் இப்போது இருக்கும் நடிகர்கள் எல்லாம் ஓவர் பந்தா காட்டி வரும் போது விஜயகாந்த் அப்படி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் முதற்கொண்டு அனைவரிடமும் அன்பாக பழக்கூடிய மனிதராக திகழ்ந்தார். அப்படிப்பட்ட மனிதர் தற்போது பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.