நொந்து நூடுல்ஸ் ஆன பிக்பாஸ் நடிகை? வாய்ப்பு கொடுக்காமல் விரட்டியடித்த தயாரிப்பாளர்..
சினிமாவில் எப்படியாவது ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று நடிகைகள் பல வழிகளை தேடுவார்கள். அப்படி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பல நடிகைகள் வெள்ளித்திரை கதாநாயகிகளாக அறிமுகமாகி பிரபலங்களாகி விடுகிறார்கள்.
அப்படி தன்னை ஒரு சூப்பர் மாடல் என்று கூறி ஒப்பாரி வைத்து வருபவர் மீரா மிதுன். இன்று வரை உலக அழகி ரேஞ்சிற்கு அலப்பறை கொடுத்து வருகிறார். அப்படி சில மோசடி செயல்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கும் சென்று வந்திருக்கிறார் மீராமிதுன்.
பல பிரச்சனைகளுக்கு நடுவில் பரிதாபப்பட்ட ஒரே ஒரு இயக்குனர் மட்டும் அவருக்கு தன்னுடைய வெப் தொடரில் நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்தார். கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு சம்மதம் கூறிய மீராமிதுன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று இருக்கிறார்.
அப்போது அவரைப் பார்த்த தயாரிப்பாளர் இந்த நடிகை வேண்டாம் வேறு யாரையாவது புக் செய்யுங்கள் என்று அவரை விரட்டி விட்டாராம். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அந்த தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகராம்.
இவர் சூர்யாவைப் பற்றி எந்த அளவிற்கு மோசமாக பேசினார். இதனால் கோபத்தில் தயாரிப்பாளர் மீராமிதுனை விரட்டி அடித்துவிட்டாராம்.