சில்க் ஸ்மித்தா கடித்து போட்ட ஆப்பிள்.. அதைவைத்தே பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்..
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த கனவுக்கன்னி நடிகைகளில் ஒருவர் நடிகை சில்க் ஸ்மிதா. நடிப்பை விட காந்தப்பார்வையை வைத்து மயக்கிய சில்க் ஸ்மிதா சிறுவயதிலேயே தற்கொலை செய்து மரணமடைந்துவிட்டார்.
அவரது மரணத்தில் பல மர்மங்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. இந்நிலையில் சில்க் ஸ்மித்தாவும் மவுஸ் எப்படிப்பட்டது என்று ஒரு சம்பவம் காட்டியிருக்கிறது. அதாவது ஒரு படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சில்க் ஆப்பிளை கடித்து சாப்பிட்டு மீதமுள்ளதை போட்டுள்ளார்.

இதனை எடுக்க ரசிகர்கள் முட்டியடித்துக் கொண்டிருந்தனர். அந்த கடித்த ஆப்பிளை எடுத்த தயாரிப்பாளர் 2 ரூபாய் கூட போகாத அதை 300 ரூபாய்க்கு ஏலம் விற்று காசு பார்த்திருக்கிறார். 300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வாங்கியிருக்கிறார் ஒரு நபர்.
சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கை வரலாறு படமாக கன்னட மொழியில் எடுக்கப்பட்டது. தி டர்ட்டி பிக்சர் என பெயரிடப்பட்ட அப்படத்தில் ஆப்பிள் காட்சிகளை வைக்க வேண்டும் என்று சில்க்காக நடித்த நடிகை அடம் பிடித்திருக்கிறாராம். அப்படி வீணா மாலிக் ஒரு ஆப்பிளை கடிப்பது போன்ற போஸ்டர் கூட இணையத்தில் வைரலானது.