ஆசை ஆசையாய் பார்க்க வந்த தயாரிப்பாளர்!! நெபோலியனை போல் சரத்குமரால் கடுப்பாகிய விஜய்..

Napoleon Sarathkumar Vijay Gossip Today Varisu
By Edward 1 மாதம் முன்
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், வாரிசு படத்தின் வெற்றியை முடித்துவிட்டு 67வது படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார். வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிகர் சரத்குமார் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

ஷூட்டிங் சமயத்தில் விஜய் சரத்குமாரின் ஒரு செயலால் கடுப்பாகி சில நாட்கள் பேசாமலே இருந்துள்ளராம். விஜய்யின் ஆரம்பகாலக்கட்ட சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றிய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ்.

இந்நிறுவனத்தைல் தலைவர் ஆர்பி செளத்ரி, விஜய்யை வைத்து பூவே உனக்காக, ஷாஜகான், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற சூப்பட் ஹிட் படங்களை தயாரித்தார். அப்படி தற்போது சூப்பர் குட் பிலிம்ஸ்-ன் 100வது படத்தினை விஜய்யை வைத்து எடுத்தே ஆகவேண்டும் என்று சரத்குமாரிடம் கூறியிருக்கிறார்.

வாரிசு படத்தின் போது விஜய்யை சந்திக்க சரத்குமாரிடம் ஆர் பி செளத்ரி உதவி கேட்டுள்ளார். ஆனால், விஜய்யிடன் ஒப்புதல் வாங்காமலே சரத்குமார், ஆர்பி செளத்ரியை கூட்டிச்சென்றுள்ளார்.

விஜய்யும் எதையாவது சொல்லி அமைதியாக வழி அனுப்பி வைத்துள்ளார். இதனால் விஜய் கடுமையான கோபத்தில் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிவிட்டார். அதன்பின் சில நாட்கள் ஷூட்டிங் சமயத்தை தவிர சரத்குமாரிடம் பேசாமல் இருந்துள்ளார்.

இதே, பழைய விஜய்-ஆக இருந்திருந்தால் நெபோலியனை அவமானப்படுத்தியது போல் சரத்குமாரையும் எதையாவது சொல்லி இருப்பார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு பொருளாக அமைந்துள்ளது.