கமலால் நடுத்தெருக்கு வந்து அக்கடதேசம் ஓடிய தயாரிப்பாளர்! யார் யார்?

kamalhaasan lingusamy ilaiyaraaja kalaipulidhanu thenappan
3 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். குழந்தை நட்சத்திரமான ஆரம்பித்து நடிப்பு, இயக்கம், திரைகதை, பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையால் தமிழ் ரசிகர்களை ஆண்டு வருகிறார். அப்படி பல ஹிட் படங்களை கொடுத்த கமலின் 230 படங்கள் சில தோல்வியை சந்தித்தது.

அதிலும் முக்கிய தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தையும் கொடுத்து நடுத்தெருவிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இளையராஜா தயாரிப்பில் கமல் சிங்கார வேலன் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தால் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்ததால் தயாரிப்பை விட்டுவிட்டு இசையிலேயே கவனம் செலுத்திவிட்டார்.

தயாரிப்பாளர் தானுவை வைத்து ஆளவந்தான் படத்தில் நடித்தார். இல்லாத ஒன்றினை இருப்பது போன்ற கதைகளத்தை உருவாக்கிய இப்படம் 400 கோடி செலவில் உருவாகி கதை பிடிக்காமல் நஷ்டத்தை கொடுத்தது. ஆனால் அப்படத்திற்கு பிறகு காக்க காக்க படம் நல்ல ஹிட் கொடுத்து தானுவிற்கு பூஸ்ட் கொடுத்தது.

தயாரிப்பாளர் தேனப்பன் என்பவரை வைத்து காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற படங்களால் நஷ்டத்தை கொடுத்தது. பல ஆண்டுகள் சினிமா பக்கம் காணாமல் போனார் தேனப்பன்.

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தினை கமலை இயக்கிய சரண் அப்படத்தின் வசூல் நஷ்டமானதால் அட்வான்ஸ் பிரச்சனையை சந்தித்தார். கதை நன்றாக இருந்ததது ஆனால் வசூலில் ஏமாற்றத்தை தந்தபடம் வேட்டையாடு விளையாடு.

உத்தமவில்லன் படத்தினை வைத்து லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ்-உடன் இணைந்து தயாரித்ததில் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்தார். இதன் பின் சண்டக்கோழி, அஞ்சான் படத்தால் காணாமல் போனார். பின் தெலுங்கு பக்கம் சென்று வாரியர் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

விஷ்பரூபம் முதல் பாகம் பெரியளவில் வசூல் வேட்டை கொடுத்ததை அடுத்து விஷ்பரூபம் இரண்டாம் பாகம் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரித்தது. ஆனால் படம் வெற்றியாகாமல் பிளாப் கொடுத்தது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.