விஜய் பட வில்லனுக்கு மிரட்டல்!! அந்தரங்க வீடியோவால் பயப்படும் பிரபல நடிகர்..
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் கிச்சா சுதீப்.
ராஜமவுலி இயக்கத்தில் நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்த சுதீப், விஜய்யின் புலி படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.
பல படங்களில் வில்லனாக நடித்து வரும் கிச்சா சுதீப் கர்நாடகாவில் வரும் மே 10 தேதியில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
சமீபத்தில் அதற்கான பேட்டியளித்தும் கூறியிருந்த சுதீப் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் சுதீப் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்தால் அவரது அந்தரங்க வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளாராம்.
இதுகுறித்து சுதீப்பிடம் கேட்டபோது, இந்த விசயத்தை யார் செய்திருப்பார்கள் என்று எனக்கு தெரிந்த ஒன்று தான், அது சினிமா சம்பந்தப்பட்டவராக தான் இருப்பார் என்று சுதீப் தெரிவித்துள்ளார்.
அப்படி அந்தரங்க வீடியோ இருப்பது உண்மை என்று கன்னட சினிமா வட்டாராத்தில் விமர்சிக்கப்பட்டும் வருகிறார்கள்.