பப்ளிசிட்டிக்காக இப்படியா? ஓட்டு போட்டதை நடுவிரலை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை!

biggboss bjp vote Kaajal Pasupathi
By Jon Apr 07, 2021 04:07 AM GMT
Report

தமிழகத்தில் தற்போது சட்டபேரவைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 1மணி வரை தமிழகத்தில் 39.61% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. 3ல் ஒரு பகுதியினர் இதுவரையில் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் வாக்குகளை பதிவிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில், சிறு கதாபாத்திர நடிகையாகவும் பிக்பாஸ் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் பசுபதி. இன்று மதியம் அவர் ஓட்டுப்போட்டதை அடுத்து அதை சமுகவலைத்தளத்தில் தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில் நடுவிரலை காமித்தும் ஓட்டுப்போட்ட விரலை காமித்தும் புகைப்படத்தை வெளியிட்டு, RipAdmkBjp என்ற ஹாஸ்டேக்கினை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார். மேலும், நெஞ்சுக்குல் பெய்திடும் மாமழை, நீருக்கும் பெய்திடும்.... என்ற வார்த்தையில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.