தேவையில்லாமல் பொய் செய்தியை பரப்பாதீர்கள், பலபேர் வாழ்கை வீணாகிறது, புகழ் கோபம்
Pugazh
By Tony
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் உச்சம் தொட்டவர் புகழ். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் புகழ் வந்தாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.
அதன்படி புகழ் தற்போது சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். அதிலும் இவர் குணச்சித்திர கதாபத்திரத்தில் நடித்த 1947, அயோத்தி ஆகிய படங்கள் பெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் புகழ் சமீபத்தில் ஒரு பேட்டியில், சிலர் வேண்டுமென்றே நான் நடித்தால் படம் ஓடாது என்று கிளப்பி விட்டு வருகின்றனர்.
அவர்கள் என்னை டார்க்கெட் செய்வதாக நினைத்து அந்த படத்தில் பணியாற்றிய பலருக்கும் வாழ்க்கை இழக்கும்படி ஒரு படத்தை மோசமாக்குகின்றனர், நான் காமெடியனாக நடித்த படங்களும் ஓடியுள்ளது என கோபமாக புகழ் பேசியுள்ளார்.