நடுரோட்டுக்கு வந்த குக் வித் கோமாளி புகழ்! பஸ் ஸ்டாண்ட் சோகத்தோடு வெளியான புகைப்படம்
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் குக் வித் கோமாளி. பிரபல தொலைக்காட்சி சேனலில் 3 சீசன்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி. இதில் வரும் கோமாளிகள் செய்யும் அரட்டைகள் மிகப்பெரிய இடத்தினை பெற்று வருகிறார்கள்.
அதிலும் அதிகமாக கவனத்தை பெற்று சினிமாவில் நடிகராக நடிக்க ஆரம்பித்துள்ளார் புகழ். பெண் போட்டியாளர்களுடன் அவர் செய்யும் ரொமாண்டிக் காமெடி, சிவாங்கியுடன் அண்ணன் காமெடி என மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளார்.
தற்போது வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில படங்களில் சிறு காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். இதையடுத்து Zoo keeper என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் விருது நகர் ஜெயிலில் எடுக்கப்பட ஷூட்டினை முடித்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது ராமேஷ்வரம் காலிங் என்று பதிவிட்டு பஸ் ஸ்டாண்ட்டில் தலையில் கை வைத்து இடிவிழுந்தது போல் உட்கார்ந்து ஒரு போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இயக்கத்தில் அயோத்தி என்ற படத்தில் புகழ் நடித்து வருவதாகவும், அதன் படப்பிடிப்பு ராமேஷ்வரம் கடலில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதன் புகைப்படங்களை புகழ் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

