நான் நடிச்ச ஓடாத படமெல்லாம்!! அஜித்துக்குள் இப்படியொரு ஹியூமரா!! புகழ் சொன்ன ரகசியம்..

Ajith Kumar Pugazh Gossip Today
By Jai Jun 18, 2026 06:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்கள் ரிலீஸானது. இரு படம் ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ரூ. 180 கோடி சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளர்கள் யாரும் முன் வராததால், 150 கோடியாக குறைத்துள்ளாராம்.

நான் நடிச்ச ஓடாத படமெல்லாம்!! அஜித்துக்குள் இப்படியொரு ஹியூமரா!! புகழ் சொன்ன ரகசியம்.. | Pugazh Reveals Ajiths Humble Reply Comedy Films

புகழ்

இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்தில் நடித்த குக் வித் கோமாளி பிரபலம் புகழ், ஒரு சில விஷயத்தை பகிர்ந்துள்ளார். அமேசான் பிரைமில் ஒரு ஷோ செய்து கொண்டிருந்தேன்.

அதில் நான் தான் டைட்டில் வின்னர். அச்சமயத்தில் அஜித் சாரின் வலிமை பட வாய்ப்பு வந்தது. எப்படியோ அந்த ஷோ தயாரிப்பாளர்களிடம் பேசி அப்படத்தில் நடித்துவிட்டேன். வலிமை ஷூட்டிங்கிற்கு முதல்நாள் போனபோது என் கண்கள் சிவந்திருந்தது. அஜித் சார் என்னை பார்த்தவுடன், கண்கள் எல்லாம் ஏன் சிவந்திருக்கிறது என்று கேட்டார்.

நான் நடிச்ச ஓடாத படமெல்லாம்!! அஜித்துக்குள் இப்படியொரு ஹியூமரா!! புகழ் சொன்ன ரகசியம்.. | Pugazh Reveals Ajiths Humble Reply Comedy Films

நேற்று ஷூட்டிங் தூங்கவில்லை என்று சொன்னேன். சரி நீங்கள் போய் ரெஸ்ட் எடுங்கள் என்றார். தூங்கி எழுந்து வந்து நடிக்க சென்றேன். அவர் வேற லெவல், செம மனுஷன். அவரிடம் ஒருமுறை, ஐயா காமெடி படம் பண்ணலாமே, நானும் உங்கள்கூட நடிப்பேனே என்று கேட்டேன். அதற்கு அவர், நிறைய படங்கள் செய்திருக்கேனே, என்னுடைய ஓடாத படமெல்லாம் காமெடி படம் தான் புகழ் என்று கூறினார்.