நேத்து ஜெயில், இப்போ சிங்கபூரா? அந்த ஒரே படத்துக்காக விமானத்தில் பறக்கும் விஜய் டிவி புகழ்..

Ajith Kumar Star Vijay Cooku with Comali Pugazh
By Edward Jun 30, 2022 03:00 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி கலக்கபோவது யாரு. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபலமானவர்கள் தற்போது வரைக்கும் அதே நிகழ்ச்சியில் தான் போட்டியாளர்களாக இருந்து வருகிறார்கள். ஆனால் ஒருசிலர் சினிமாவில் வாய்ப்பு பெற்று பிரபலமடைந்து வருகிறார்கள்.

நேத்து ஜெயில், இப்போ சிங்கபூரா? அந்த ஒரே படத்துக்காக விமானத்தில் பறக்கும் விஜய் டிவி புகழ்.. | Pugazh Start Shooting In Singapore From Chennai

கேபிஒய் டு குக் வித் கோமாளி

அந்தவரிசையில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து மக்கள் ஆதரவை பெற்றவர் புகழ். குக்வித் கோமாளியில் புகழ் செய்யும் அட்டகாசம் மக்கள் மத்தியில் மிகவும் கவர்ந்து வருகிறது.

இந்நிகழ்ச்சி மூலம் லட்சம் சம்பளம் வாங்கும் கோமாளியாகவும் திகழ்ந்து வருகிறார். கடந்த 3 சீசன்களிலும் கலந்து கொண்டு வந்த புகழ், அஜித் குமாரின் வலிமை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

நேத்து ஜெயில், இப்போ சிங்கபூரா? அந்த ஒரே படத்துக்காக விமானத்தில் பறக்கும் விஜய் டிவி புகழ்.. | Pugazh Start Shooting In Singapore From Chennai

படங்கள்

இதையடுத்து எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட ஒருசில படங்களில் காமெடியனாகவும் நடித்திருந்தார். தற்போது புகழ் கதாநாயகனாக நடிக்கும் Zoo Keeper என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஜெயிலில் இருந்து வெளியே வரும் காட்சியின் வீடியோ இணையத்தில் பரவி வைரலானது.

இதைதொடர்ந்து, புகழ் தன் வருங்கால மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டார். தற்போது மீண்டும் படப்பிடிப்புக்காக சிங்கபூர் செல்லவுள்ளார். அதற்காக சென்னை விமான நிலையத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.