90ஸ் கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது.. வருங்கால மனைவியுடன் அப்படியொரு வீடியோ

video love future wife pugazh
By Kathick Apr 09, 2022 12:45 PM GMT
Report

வெளியிட்ட புகழ் குக் வித் கோமாளி எனும் ஒரே நிகழ்ச்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக மாறியுள்ளார் புகழ். ஆம், முதல் முதலில் விஜய் டிவிக்கு வந்த புகழ் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி சிரிச்சா போச்சு குழுவுடன் இணைந்துள்ளார்.

இதன்பின் கொஞ்சம் பிரபலமான இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக என்ட்ரி கொடுத்தார். முதல் சீஸனின் நல்ல வரவேற்பை பெற்ற இவர், மீண்டும் இரண்டாவது சீசனில் பட்டையை கிளப்பி ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தார். மேலும் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வரும் புகழ் கிடைக்கும் நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்து செல்கிறார்.

தான் ஒரு பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வருவதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் புகழ். இந்த வருடத்திற்குள் திருமணம் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தனது வருங்கால மனையுடன் ரொமான்டிக்காக வசனம் பேசி எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..