இன்ஸ்டா விளம்பரத்திற்கு நடிகை ரம்யா பாண்டியனின் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை லட்சமா!

actress price instagram Ramya Pandiyan
By Jon Mar 27, 2021 04:22 PM GMT
Report

தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதையடுத்து சமுக பிரச்சனைகளை மையமாக எடுத்து 2016ல் வெளியான படம் ஜோக்கர். அப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். படத்தில் நடித்தாலும் படவாய்ப்பு இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் போட்டோஹுட் பக்கம் சென்றார்.

மொட்டைமாடி போட்டோஹுட் மூலம் இடுப்பை காட்டி அனைத்து இணையத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இதன்மூலம் தேடப்படும் நடிகையாக இருந்து பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். மேலும் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு 4ஆம் இடத்தினை பிடித்து வெளியேறி சிலரின் வெறுப்பை சம்பாதித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படத்தை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 1 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். பெருமபாலான பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் பொருட்களை ப்ரோமஷன் செய்வது வழக்கம்.

இதற்கு பணமும் வாங்குவார்கள். அந்தவகையில் ரம்யா பாண்டியன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ப்ரோமோஷனுக்கு 10 லட்சம் வாங்குகிறாராம். அதுமட்டுமல்லாமல் பேட்டிகளில் பங்கேற்றாலும் அதற்கும் பணம் வாங்குகிறாராம்.