கைது செய்து ரீலீஸான அல்லு அர்ஜுன் மனைவி சினேகாவின் சொத்து மதிப்பு!! இத்தனை கோடியா?
அல்லு அர்ஜுன்
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 படம் ரிலீஸாகி 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறார்.
இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் பார்க்க சென்ற போது, ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
அவரின் மரணத்திற்கு மன்னிப்பு கேட்டும் 25 லட்சம் தொகையையும் அல்லு அர்ஜுன் வழங்கினார். இதனைதொடர்ந்து இந்த விவகாரம் குறித்து வழக்கு போடப்பட்ட நிலையில், நேற்று மாலை ஹைதராபாத் போலிசார் அல்லு அர்ஜுனை அவர் வீட்டிற்கே சென்று கைது செய்தனர்.
இதனால் டோலிவுட் வட்டாரமே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அல்லு அர்ஜுனுக்கு பல பிரபலங்கள் ஆதரவளித்து வந்தனர். இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், போலிஸ் காவலில் இருந்த அல்லு அர்ஜுனை இன்று மாலை தான் ரிலீஸ் செய்தனர்.
மனைவி சினேகாவின் சொத்து மதிப்பு
வீட்டிற்கு வந்த அல்லு அர்ஜுனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து அழுது கொண்டே வரவேற்றார் அவரது மனைவி சினேகா. இந்நிலையில் அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபராக அறியப்படும் சினேகா ரெட்டி, மசாசூசெட்ஸ் நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறையில் இன்ஜினியரிங் பட்டம் பெற்று அமெரிக்காவில் கம்யூட்டர் சைன்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்.
சைண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவந்த்தில் இயக்குநராக பொறுப்பு வகித்து, 2016ல் ஹில்ஸில் ஸ்டூடியோ பிகாபூ என்ற ஆன்லைன் போட்டோ ஸ்டூடியோவை தொடங்கினார். இப்படி பல நிறுவனங்களை மேற்கொள்ளும் சினேகா ரெட்டியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 42 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.