SA,WI வீரர்களுக்கு ஓரவஞ்சனை காட்டும் ICC!! ஆவேசத்தில் பொங்கிய தென்னாப்பிரிக்கா வீரர் டி காக்..

Gossip Today Quinton de Kock South Africa National Cricket Team ICC Men T20 World Cup 2026
By Edward Mar 08, 2026 11:45 AM GMT
Report

உலககோப்பை 2026

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பல நாடுகளில் சர்வதேச விமானப்போக்குவரது பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பாதுகாப்பு காரணமாக பல நாடுகள் வான்வெளியை மூடியுள்ள நிலையில், வணி விமானச்சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடந்து வரும் உலககோப்பை பங்கேற்று வெளியேறிய தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் சிக்கி தாயாகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

SA,WI வீரர்களுக்கு ஓரவஞ்சனை காட்டும் ICC!! ஆவேசத்தில் பொங்கிய தென்னாப்பிரிக்கா வீரர் டி காக்.. | Quinton De Kock Slams Icc Over Alleged Favouritism

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை லீக் சுற்றுடன் வெளியேறியது. தென்னாப்பிரிக்கா அணி புதன்கிழமை நடந்த முதல் அரையிறுதி சுற்றில் தோற்றது. இங்கிலாந்து அணி வியாழக்கிழமை இந்தியாவிடம் அரையிறுதியில் தோற்றது.

வியாழக்கிழமை தோற்ற இங்கிலாந்து அணிக்கு, சனிக்கிழமை மாலையே மும்பையில் இருந்து லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் புதன்கிழமை தோற்ற தென்னாப்பிரிக்கா அணி இன்னும் இந்தியாவில் காத்திருக்கிறார்கள்.

குயின்டன் டி காக்

இது குறித்து தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் குயின்டன் டி காக் அதிருப்தி அடைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.

SA,WI வீரர்களுக்கு ஓரவஞ்சனை காட்டும் ICC!! ஆவேசத்தில் பொங்கிய தென்னாப்பிரிக்கா வீரர் டி காக்.. | Quinton De Kock Slams Icc Over Alleged Favouritism

அதில், இது மிகவும் வேடிக்கையாகவுள்ளது. எங்களைவிட தாமதமாக வெளியேறிய இங்கிலாந்து அணி எங்களுக்கு முன் கிளம்பிவிட்டார்கள். ஆனால் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருட்டில் தவிக்கின்றனர். ஐசிசி-ல் சில அணிகளுக்கு மட்டும் தனிச் செல்வாக்கு உள்ளது என்பது விசித்திரமாக இருக்கிறது என்று காட்டமாக ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் டி காக்.

இது சர்ச்சையான நிலையில், இரு அணிகளின் வீரர்களை அழைத்துச் செல்ல ஐசிசி தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து, இன்று ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தாவில் இருந்து முதலில் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு செல்லும்.

பின் தென்னாப்பிரிக்கா அணி வீரர்களை இறக்கியப்பின், அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கலை ஏற்றிக்கொண்டு ஆண்டிகுவா செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒருவேளை அவர்கள் இந்த வார இறுதிக்குள் நாடு திரும்பாவிட்டால் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Gallery