திருமணத்தில் வந்த சிக்கல்..சோகத்தில் பெண் வீட்டார்!! சிவகார்த்திகேயன் செய்த சம்பவம்..
நடிகர் நரேன் நடிப்பில் 2015ல் வெளியான கத்துக்குட்டி படத்தினை இயக்கி தமிழில் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இரா. சரவணன். 2021ல் நடிகை ஜோதிகாவை வைத்து உடன் பிறப்பே, 2024ல் நந்தன் போன்ற படங்களை இயக்கினர் சரவணன். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள ஒரு பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இரா. சரவணன்
அதில், நண்பர் ஒருவரின் மகளுக்கு திருமணத்திற்கு முதல் நாள் பெண் அழைப்பில் கலந்து கொண்டேன். இரு கரம் நீட்டி வாஞ்சை காட்டும் நண்பரின் முகத்தில் அவ்வளவு மகிழ்வு இல்லை. திருமண விட்டிற்கே உரிய எந்த கலகலப்பும் நிம்மதியும் அங்கில்லை. விசாரித்தபோது, பெண் வீட்டார் பெரியலவில் வசதியானவர்களாக இல்லாததுதான் மாப்பிள்ளை வீட்டாருக்கு குறையாக இருந்துள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக மாப்பிள்ளை வீட்டார் குறைகூற, பெண் வீட்டார் சங்கடத்துடன் நின்றுள்ளனர்.
அந்நேரத்தில் எனக்கொரு அழைப்பு வர, அதில் தம்பி சிவகார்த்திகேயன் வேறொரு விஷயத்திற்காக அழைத்திருந்தார். அவர் கேட்ட தகவல்களை சொன்னேன். கூடவே நான் கலந்துகொண்ட நிகழ்வின் கவலையை அவர் கேட்காமலே சொன்னேன்.

இன்னும் வசதி வாய்ப்புகளையும் வரதட்சணையையும் வைத்து மதிப்பிடப்படுகிற பெண்களின் நெருக்கடி வாழ்வை தம்பியிடம் சொன்னேன். மணமகளின் பெயர் என்ன என்று கேட்டதற்கு நானும் சொன்னேன். பிற விஷயங்களை பேசிவிட்டு நண்பரின் நிகவுக்கு வந்தேன். பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. நான் நண்பரை அமைதிப்படுத்தினேன். சில நிமிடத்தில் என் அழைபேசிக்கு ஒரு வீடியோ பதிவு வந்தது.
சிவகார்த்திகேயன்
அன்பு தங்கைக்கு நான் சிவகார்த்திகேயன் பேசுறேன். உங்களுக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள். நீங்களும் மணமகனும் பெருவாழ்வு வாழணும். எல்லோருக்கும் முன்னுதாரணமாக வாழ்வை நீங்க வாழப்போறீங்க. உங்க ஊர்ப்பக்கம் வர்றப்ப நிச்சயம் உங்க எல்லாரையும் சந்திக்கிறேன் என்று வீடியோ பதிவினை அனுப்பினார் சிவகார்த்திகேயன். நான் சிலிர்த்துப்போனேன்.
உடனே மணமகளின் தந்தைக்கு அந்த காணொளியை அனுப்பினேன். அவர் அதை மகளுக்கு காட்ட, அடுத்த சில நிமிடங்களில் மணமகன் வீட்டார் அத்தனை பேருக்கும் அது பரவியது. அதுவரை நிலவிய குழப்பங்கள் போன இடம் தெரியாமல் போனது. சிவகார்த்திகேயன் வாழ்த்தி இருக்கார்னா அது எவ்வளவு பெரிய விஷயம் என்று ஒருக்கட்டத்தில் மணப்பெண்ணை கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.

நிமிடத்தில் சிவகார்த்திகேயன் யோசித்த விதம்தான் இதில் மிகவும் முக்கியமானது. அந்தக் குடும்பத்தை பற்றி சொன்ன நான் அவரிடம் எந்த உதவியையும் கேட்கவில்லை. ஆனால் சட்டென யோசித்து அவர் செயல்பட்ட சமயோசிதம் மகத்தானது. இன்றைக்கு அந்தக்குடும்பம் பேரன்பின் அடையாளமாக ஜொலிக்கிறது.
தம்பி சிவகார்த்திகேயன் பற்றி பேசுகிற போதெல்லாம் ஒவ்வொரு முறையும் நான் ஏன் சிலிரிக்கிறேன் என்றால் பிறர் மீது அவர் காட்டுகிற இத்தகைய பேரன்பும் அக்கறையும் தான் காரணம். தன்னால் ஏதாவது உதவ முடியுமெனில் அதை செய்துதான் பார்ப்போமே என்ற மெனக்கிடல் அவருக்கு எப்போதும் உண்டு.
அந்த மணமக்களின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் நீங்கள் நம்ம வீட்டுப்பிள்ளை தான் என்று இரா சரவணன் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.