எனக்கு நடிக்க விருப்பமே இல்லை..வேறு வழியில்லாம நடிச்சேன்!! நடிகை ராஷி கண்ணா..

Raashi Khanna Pawan Kalyan Gossip Today Rashi Khanna
By Edward Mar 15, 2026 07:45 AM GMT
Report

ராஷி கண்ணா

மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, இமைக்கா நொடிகள் படத்தில் மூலமும் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா. இதனையடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, பவன் கல்யாண் நடிப்பில் வரும் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ஊஸ்தாத் பகத்சிங் படத்தில் நடித்துள்ளார்.

எனக்கு நடிக்க விருப்பமே இல்லை..வேறு வழியில்லாம நடிச்சேன்!! நடிகை ராஷி கண்ணா.. | Raashi Khanna About Failure Of Film Telusu Kada

இப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட ராஷி கண்ணா, இயக்குநர் நீரஜா கோனா இயக்கத்தில் ஜொன்னலகட்டா, ராஷி கண்ணா, ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த ‘தெலுசு கடா’ படதோல்வி குறித்து பகிர்ந்துள்ளார்.

எனக்கு நடிக்க விருப்பமே இல்லை

அப்படத்தில் நடிக்கும்போதே எனக்கு படத்தினுடைய வெற்றி எப்படியிருக்கும் என்று தெரிந்துவிட்டது. ஏனென்றால் படத்தில் எனக்கு பிடிக்காத பல காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

சில காட்சிகளில் படமாக்கும்போது அது எனக்கு சரியில்லை என்று தோன்றியது. ஆனாலும் இயக்குநர் மீது இருந்த நம்பிக்கையால் மாற்றுக்கருத்து ஏதும் சொல்லாமல் அப்படத்தில் நடித்து முடித்தேன். ஆனால் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அறுவை சிகிச்சை காட்சியில் எனக்கு நடிக்க விருப்பமே இல்லை.

எனக்கு நடிக்க விருப்பமே இல்லை..வேறு வழியில்லாம நடிச்சேன்!! நடிகை ராஷி கண்ணா.. | Raashi Khanna About Failure Of Film Telusu Kada

இருந்தாலும் கிளைமேக்ஸ் காட்சி என்பதால் தவிர்க்க முடியாமல், அதில் நடிக்க வேண்டியதாகிவிட்டது. அந்த படம் எங்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொடுத்தது. எந்த கருத்தாக இருந்தாலும் அதை ஆழமாக அழுத்தமாக சொல்ல வேண்டும் என்று, அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பின்போது கதையை பலமுறை மாற்றிமாற்றி எடுத்தார்கள். இதுதான் அப்படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என்று ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.