விஜய் டிவி மீது இருக்கும் கோபத்தில் ரச்சிதா செய்திருக்கும் விஷயம்
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. அவர் அதன் பின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மிர்ச்சி செந்தில் ஜோடியாக நடித்து வந்தார். அந்த சீரியலில் ஆரம்பத்தில் அவருக்கு அதிகம் முக்கியத்தும் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு மாயன் - மாறன் என ட்வின்ஸ் ரோலில் செந்தில் நடிக்க தொடங்கிய பிறகு ரச்சிதாவுக்கு சுத்தமாக முக்கியத்துவம் இல்லாமல் போனது.
அவர் தொடரை விட்டு வெளியேறுகிறார் என தொடர்ந்து வதந்தி பரவி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர் நிஜத்திலேயே வெளியேறிவிட்டார். அதன் பிறகு அவர் எந்த புது தொடர்களிலும் கமிட் ஆகாமல் தான் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவி மீது இருக்கும் கோபத்தில் தற்போது கலர்ஸ் தமிழ் டிவிக்கு தாவி இருக்கிறார் ரச்சிதா. இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் அவர் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இரண்டு பெரிய குழந்தைகளுக்கு அம்மாவாக, கணவரை இழந்து தவிக்கும் ரோலில் தான் ரச்சிதா நடிக்கிறார். விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பை தொடங்க இருக்கிறது.
எப்படிப்பட்ட ரோலாக இருந்தாலும் பரவாயில்லை, விஜய் டிவி முகத்தில் கரி பூச வேண்டும் என தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கவும் ஒப்புக்கொண்டாரோ.