நடிகருடன் நெருக்கமான காட்சி..மகளே கிடையாதுன்னு சொன்ன பெற்றோர்!! கண்ணீர்விட்டு அழுத நடிகை..
ரச்சிதா ராம்
கன்னட சினிமாவில் 2019ல் வெளியான ஐ லவ் யூ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா ராம். நடிகர் உபேந்திராவுக்கு ஜோடியாக அப்படத்தில் நடித்திருந்தார் ரச்சிதா ராம்.
2007ல் வெளியான ஐ திங்க் ஐ லவ் மை வைஃப் என்ற ஆங்கில் படத்தின் ரீமேக் தான் ஐ லவ் யூ படம். இப்படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் ரச்சிதாவுக்கு அதில் சந்ஹோஷம் இல்லை. படத்தின் ஹீரோவுடன் நெருக்கமான காட்சி ஒன்றில் நடிக்க வேண்டியிருந்தது.
நடிகருடன் நெருக்கமான காட்சி
ஆனால் அவரது பெற்றோர் தங்கள் மகள் அத்தகைய காட்சியில் நடிப்பதை விரும்பவில்லை. இதுதொடர்பாக ரச்சிதா அளித்த பேட்டியில், நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்கு நான் வருத்தபடவில்லை. அது தன் பெற்றோருக்கு பிடிக்கவில்லை.
காரணம், என் பெற்றோருக்கு தான் இன்னும் ஒரு குழந்தைதான் என்றும் இதுபோன்ற ஒரு வேடத்தில் நடித்ததால் அவர்கள் வருத்தபட்டதாகவும் ரச்சிதா தெரிவித்துள்ளார்.
ஒருக்கட்டத்தில் அவரது அம்மா, உன்னை ஒரு நடிகையாக ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் உன்னை ஒருபோதும் மகளாக பார்க்க மாட்டேன் என்று கூறியது ரச்சிதாவை லுக்கியது.
இதனால் அம்மா அப்பா இருவரிடமும் உடனடியாக மன்னிப்பு கேட்டதாகவும், இனிமேல் இதுபோன்ற காட்சியில் நடிக்கமாட்டேன் ரச்சிதா நடந்த சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.