அரைகுறை ஆடை அணிந்து வீடியோக்கள்!! அப்படி வேண்டாம்.. பிக் பாஸ் ரச்சிதா ஆவேசம்
ரச்சிதா
தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அந்த தொடரில் தனது நிறத்தை கருப்பாக மாற்றி நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின், சரவணன் மீனாட்சி என்ற ஹிட் தொடரின் 2வது சீசனில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். பின் நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து நடித்து வந்தார்.
அதன் பிறகு பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக சென்று பிரபலமானார். கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் புது சீரியல்கள் எதிலும் நடிக்காமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரச்சிதா ஆவேசம்
இந்நிலையில், செய்தியாளர்கள் மத்தியில் இவர் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை பெற்றுள்ளது. அதில், " சிலர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடை போட்டு வீடியோக்கள், புகைப்படங்கள் என வெளியிட்டு வருகின்றனர்.
அதுபோன்ற ஆபாசமான போட்டோக்களுக்கு லைக் போடாதீர்கள். பெண்கள் சில விஷயங்களை கடைப்பிடித்து உடைகளை அணிய வேண்டும். இது போன்ற பெண்களால் சாதாரண பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் இவர்களை எங்ரேஜ் செய்யாமல் இருக்க வேண்டும் " என்று கூறியுள்ளார்.