பிக்பாஸ்-ல் முன்னாள் கணவர்!! அப்பா மரணத்திற்கு பின் விவாகரத்தை உறுதி செய்த நடிகை ரச்சிதா..
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தற்போது பிக்பாஸ் பிரபலமாக ஜொலித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விவாகரத்துக்காக காத்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் தினேஷை பிரிந்து வாழ்ந்து வந்த ரச்சிதா, தன்னை தினேஷ் டார்ச்சர் செய்தும் பணம் கேட்டும் வருவதாக போலிசில் புகாரளித்திருந்தார்.
ஆனால் தினேஷ் தகுந்த ஆதாரத்தை கொடுத்ததோடு, ரச்சிதாவை விவாகரத்துக்கும் விண்ணப்பிக்கலாம் என்று பதிலடி கொடுத்தார்.
விரைவில் இருவரும் விவாகரத்து பெற்றுவிடுவார்கள் என்று நினைத்த நிலையில், ரச்சிதாவின் அப்பா கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
இதற்கு பலரும் ஆறுதல் கூறி இரங்கலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அப்பா இறந்து சில தினங்கள் ஆன நிலையில், அப்பா புகைப்படத்திற்கு முன் ரச்சிதாவும் அவரது அம்மாவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் எனக்கு நீ உனக்கு நான் என்று கூறி ஒரு பதிவினை போட்டும் இருக்கிறார். இதனை பார்த்த பலரும் விவாகரத்து கன்ஃபார்ம்-ஆ என்று கூறியும் வருகிறார்கள்.
சமீபத்தில் தான் ரச்சிதா கணவர் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்ட் மூலம் சென்று மறைமுகமாக ரச்சிதாவை விமர்சித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.