என்கிட்ட அப்படி நடந்தாங்க, அவுங்க எண்ணம் எல்லாம்.. தினேஷை தாக்கிய ரச்சிதா
Actors
Rachitha Mahalakshmi
Tamil TV Serials
Dinesh Gopalsamy
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அந்த சீரியலில் அவருடன் சேர்ந்து நடித்த தினேஷ் மீது காதல் ஏற்பட்டு இருவரும் இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இவர்கள், கருத்து வேறுபாடு காரணம் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட திணேஷ்க்கு எதிராக பல பதிவுகள் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ரச்சிதா மகாலட்சுமி தினேஷை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அந்த பதிவில்,
"எனக்கு கெட்டது செய்தவர்கள், எனது பதிவு எல்லாமே அவர்களை பற்றியது தான் என நினைப்பார்கள். நல்லா இருங்க" என ரச்சிதா பதிவிட்டு இருக்கிறார்.