நடுகாட்டில் பிக்பாஸ் பிரபலங்களுடன் நடிகை ரச்சிதா!! அவுட்டிங் சென்ற புகைப்படம்

Bigg Boss Rachitha Mahalakshmi Vj Maheswari
By Edward May 16, 2023 05:30 PM GMT
Report

வெள்ளித்திரையில் இருக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் சீரியல் நடிகை ரச்சிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சமீபகாலமாக ரச்சிதா தனது கணவர் நடிகர் தினேஷ் என்பவரை விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் ரச்சிதா சீரியல் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ரச்சிதா திருமணம் செய்து கொண்ட பிறகு தன் கணவர் தினேஷ் உடன் சில கருத்து வேறுபாடு எழுந்தது. மேலும் ரச்சிதாவிற்கு உடல்நிலை பிரச்சனையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லையாம்.

இதனால் ரச்சிதா தினேஷ் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படுமாம். இதனால் தான் கணவரை பிரிந்தார் என்று பத்திரிக்கையாளர் கூறியிருந்தார்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத ரச்சிதா பிக்பாஸ் நண்பர்களான விஜே மகாலட்சுமி, ஷிவின், ஏடிகே போன்றவர்களுடன் நடுகாட்டில் ஜாலியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.