விவாகரத்து பிரச்சனை, சீரியல் பிரச்சனை.. வாய்ப்பில்லாமல் கடும் சோகத்தில் சீரியல் நடிகை
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி 2 சீசனில் நடித்து பிரபலமான ரச்சிதா, இந்த சீரியலுக்கு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முக்கிய ரோலான மகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ரச்சிதா திருமணம்
அந்த சீரியலில் இருந்து சில கருத்து வேறுபாடு காரணமாக விஜய் தொலைக்காட்சியை விட்டு வெளியேறினார். இடையில் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் சில கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்துவிட்டார் ரச்சிதா - தினேஷ் என்ற செய்தி வைரலானது.
அப்படி ஒன்றும் யோசிக்கவில்லை என்று தினேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதன்பின் ரச்சிதா கலர்ஸ் தமிழ் டிவியில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வந்தார்.
தோல்வியில் திருமணம் - சீரியல்
கணவனை இழந்த பெண் குழந்தையை எப்படி வளர்த்து கஷ்டப்படுகிறார் என்ற கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்தது. இந்த கதை என்னோட வாழ்க்கையில் நடப்பது போன்றிருக்கிறது என்று கூட கூறியிருந்தார் ரச்சிதா.
இந்நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக ரச்சிதா கூறி வருகிறார். நன்றி கலர்ஸ் தொலைக்காட்சி என்று கூறி சேனலை திட்டிய வண்ணம் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாதியில் நிறுத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்று குழப்பத்திலும் ரச்சிதா இருந்து வருகிறார்.
இதனையடுத்து சிரீயல் தான் கைக்கொடுக்கவில்லை முடங்கி போகாமல், ரச்சிதா வெப் தொடருக்கான டப்பிங் வேலையை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார்.