விவாகரத்தாகி இரண்டாம் திருமணத்திற்கு ரெடியா? திருமணகோலத்தில் வெளியான சீரியல் நடிகை ரக்ஷ்ஷிதாவின் புகைப்படம்
சின்னத்திரையில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வருகிறவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி - தினேஷ். சரவணன் மீனாட்சி சீரியலில் இருவரும் ஜோடியாக நடிக்க ஆரம்பித்து பின் ஒருசில சீரியல்களில் பணியாற்றி வந்தார். பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் ரக்ஷிதா கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்று கூறப்பட்டது. ரக்ஷிதாவும் தன் பங்கிற்கு சமீபத்தில் நடித்து வரும் சீரியல் காட்சியை போன்று தான் என் வாழ்க்கையும் என்று சோகத்துடன் ஒரு பதினை பகிர்ந்தார்.
இதனால் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் ரக்ஷிதா ஒரு இயக்குனரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டது. சமுக ஊடகத்தில் பரவு செய்திகளை நான் புறந்தள்ளிவிடுகிறேன்.
இதற்கு பதிலடி கொடுத்த ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், வெறும் காசுக்காகவும் லைக்ஸ்-க்காகவும் இப்படியான செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள், அப்படியே பண்ணிட்டு போகட்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் ரக்ஷிதா இரண்டாம் திருமணம் குறித்த கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு தினேஷ், எங்கள் இருவருக்குமான இடைவெளியும் பிரிவும் தற்காலிகமானது தான். என்று அவரது கணவர் தினேஷ் கூறியிருந்தார்.
இந்நிலையில் ரக்ஷிதா திருமண கோலத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உண்மையா இல்லை சீரியலுக்கான கெட்டப்பா என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.