இரண்டாவது திருமணம் பற்றி அதிரடி பதில் அளித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி...

Rachitha Mahalakshmi Tamil TV Serials
By Yathrika Jul 10, 2026 03:30 PM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சீரியல் நடிகைகளில் டாப் நாயகியாக இருந்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர். அந்த சீரியல் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்தார்.

பின் ஜீ தமிழ், கலர்ஸ் மற்ற தொலைக்காட்சியிலும் சீரியல்கள் நடித்து வந்தார். அண்மையில் ஒரு பேட்டியில் ரச்சிதாவிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டது.

இரண்டாவது திருமணம் பற்றி அதிரடி பதில் அளித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி... | Rachitha Mahalakshmi Opens Up About Marriage

அதற்கு அவர், எனக்குப் பலருக்கு உதவி செய்வதற்கு மிகவும் பிடிக்கும். நிறையப் பரிசுகளை மற்றவர்களுக்குக் கொடுப்பது பிடிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருக்கிறது.

ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த ரச்சிதாவிற்குள் இப்படியொரு ஆசையும் இருக்கிறது. இதையெல்லாம் நான் சுதந்திரமாகச் செய்ய வேண்டும் என்றால் நான் தனியாகத்தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.