கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Box office Gatta Kusthi 2
By Karthick Raja Jul 10, 2026 09:30 AM GMT
Report

2022-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார்.

முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி, 4 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூலை 3-ஆம் தேதி கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெளியானது.

கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Gatta Kusthi 2 Movie Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திரையரங்குகளில் கட்டா குஸ்தி திரைப்படத்தை கொண்டாடுவதை சமூக வலைத்தளங்களில் நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், 7 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளது.