சேர்ந்து வாழ நினைக்கும் கணவர் தினேஷ் வீடியோவை வெளியிட்டு விவாகரத்தை உறுதிபடுத்திய நடிகை ரச்சிதா!!
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தன்னுடன் ஜோடிப்போட்டு நடித்த நடிகர் தினேஷை காதலித்து 2015ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சிறப்பாக சென்று கொண்டிருக்கும் போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.
அதன்பின் ரச்சிதா பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு 91 நாட்கள் வரை விளையாடிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் கணவர் தினேஷை கண்டுக்கொள்ளாமல் நண்பர்களுடன் பழகி அவுட்டிங் சென்றும் போட்டோஷூட் எடுத்தும் வந்தார். அதன்பின் தினேஷ் தன்னை டார்ச்சர் செய்து வருவதாகவும் அவர் மீது போலிசிடம் புகாரளித்தார்.
ஆனால் தினேஷ், தன் மீது தப்பில்லை என்றும் ரச்சிதாவை விவாகரத்துக்கு விண்ணப்பிக்கவும் சம்மதம் தெரிவித்ததாக கூறியிருக்கிறார். இதன்பின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு தினேஷ் போட்டியாளராக வைல்ட் கார்ட் மூலம் உள்ளே நுழைந்தார். அங்கு மனைவியை பற்றி சில கருத்துக்களை கூறியும் வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ரச்சிதாவின் தந்தை மரணத்திற்கு பின் அதிலிருந்து மீண்டு வந்து இணையத்தில் ஆக்டிவாகவும் அம்மாவுடன் ஆன்மீகத்திலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ரச்சிதா தினேஷின் பெயரை தன் கையில் பச்சை குத்தி இருந்திருக்கிறார்.
தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றபோது கூட அந்த டாட்டூ ரச்சிதா கையில் இருந்துள்ளது. ஆனால் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் அந்த டேட்டூவை மறைத்து அதன்மேல் வேறொரு டாட்டூவை ரச்சிதா பதிந்திருக்கிறார்.
இதன்மூலம் தினேஷுடன் வாழப்போவதில்லை என்று மறைமுகமாக கூறுகிகிறாரா என்றும் இந்த வீடியோவை பார்த்து தினேஷ் பெயரை எடுத்துவிட்டீர்களா? அது உண்மையா? என்ற கருத்துக்களை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.