வீட்டில் மினி பார் வைத்திருக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! என்ன விலை தெரியுமா?
ரச்சிதா மகாலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி சிரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதனையடுத்து ஒருசில சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் ஃபயர் என்ற படத்தில் படுகிளாமரில் நடித்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன் என்றும் ரச்சிதா கூறியிருந்தார்.

இதன்பின் பேட்டியொன்றில், கோயிலில் வெள்ளை புடவையில் சாமி கும்பிட்டபடி எடுத்து போட்ட புகைப்படத்தை மார்ஃபிங் செய்து நான் மேலே எதுவுமே போடாதபடி எடிட் செய்த போட்டோவை ஷே செய்திருந்தார்கள்.
அந்த போட்டோவை பார்த்து நான் ஷாக்காகினேன். அதில் ஒருவர் ஏஐ-ஆ உண்மையா என்று கேட்டார். சிலர் எனக்கு கால் செய்து இப்படியொரு போட்டோ போட்டியா என்று கேட்டார்கள், எனக்கு எப்படி இருக்கும் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

வீட்டில் மினி பார்
இந்நிலையில், ஹோம் டூர் செய்த ரச்சிதா, தன்னுடைய வீட்டில் இருக்கும் டானிக் கபோர்ட் ஒன்றினை காட்டியுள்ளார். அந்த டானிக் ரூமில் மினி பாரே இருக்கிறது. ஏராளமான வெளிநாட்டு மது வகைகளும், ஒயின் வகைகளும் இருந்துள்ளது.
ஒவ்வொன்றும் தலா ரூ.25 ஆயிரத்திற்கு மேல் ஆரம்பிக்கும் மதுபானங்களாம். வாரத்திற்கு ஒரு நாள் இரண்டு, மூன்று கிளாஸ்கள் குடித்தால் போதும், தோல் எல்லாம் பளபளவென்று இருக்கும் என்றும் அதிகமாக குடித்தால் குண்டாகிவிடுவோம் என்று ரச்சிதா தெரிவித்துள்ளார்.