மனைவியுடன் விவாகரத்து வரை சென்று புலம்பும் தினேஷ்!! நடிகை ரச்சிதா என்ன செய்தார் தெரியுமா...
பிக்பாஸ் 7 சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகர் தினேஷ். சிறப்பாக விளையாடி வரும் தினேஷ், வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், என் மனைவியோடு ஏற்பட்ட பிரச்சனை தான் என் வாழ்க்கையில் பெரிய இக்கட்டான சூழல் என்றும் நாங்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் எங்களுக்கான அடையாளமும் அனைவருக்கும் தெரியும். கணவன் மனைவிக்கு ஏற்படும் சில பிரச்சனைகள் தான் எங்களுக்கும் நடந்தது.
ஈகோ காரணமாக இருவருமே சரியான முடிவை எடுக்காமல் விட்டுவிட்டு, ஒரு கட்டத்தில் பெற்றோர்களாலும் தீர்வு காண முடியாத அளவிற்கு கைமீறிவிட்டதாகவும் கூறியிருந்தார். இதனால் நான் மட்டுமல்ல என் மனைவியும் மனமுடைந்து போய் இருப்பார் என்று நினைக்கிறேன். சீக்கிரமாக அது மாறும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
பிக்பாஸில் தினேஷ் இப்படி மனைவி பற்றி கூறி வந்த நிலையில் இன்று நடிகை ரச்சிதா, தன்னுடைய அம்மவுடன் ஈஷா மையத்திற்கு சென்று எமோஷ்னலாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில், வலியின் குணமே அந்த வலியில் இருக்கிறது. வாழ்க்கையில் இறுதியான உண்மை இதுதான், உங்களுடையை வாழ்க்கைக்கு ஆன்மீக ரீதியில் மறு தொடக்கம் செய்யுங்கள். உங்களுக்கு நான் நிறைய சொல்ல வேண்டும் என்றால் அமைதியாகவும் மெளனமாகவும் இருப்பது தான் இப்போதைய விருப்பமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை தற்போது ரச்சிதா கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் தினேஷை தான் அப்படி சொல்கிறாரா அல்லது தனக்குத்தானே அறிவுரைகளை ஆன்மீகத்துடன் இணைத்து கூறுகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.