தூண்டிவிட்ட விஜய், தனுஷ்!! சிவகார்த்திகேயனுக்கு வக்காலத்து வாங்கிய நடிகை.. கேள்விகேட்ட பிரபலம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமான், சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை மறக்கமுடியாது என்றும் இனிமேல் அவருடன் இந்த ஜென்மத்தில் சேரப்போவதில்லை என்றும் கூறியது தான்.
இதற்கு பல பிரபலங்கள் இணையத்தில் பரபரப்பாக பேசி வந்த நிலையில் இமான் முன்னாள் மனைவி மோனிகாவும் சிவகார்த்திகேயனும் ஆபாசமாக பேசும் ஆடியோ இருப்பதாகவும் பிரபல பத்திரிக்கையாளர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் பிரபல விமர்சகர் வித்தகன் சேகர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியதை விமர்சித்து பேசியுள்ளார்.
பிரபல நடிகை ஒருவர், சிவகார்த்திகேயனை கண்மூடித்தனமாக ஆதரித்து பேசியிருக்கிறார். எனக்கு நேரடியாக அந்த பெண் தெரிந்தவர். அந்த நடிகைக்கு இரு மகள்கள். முதல் மகள் டிவி சீரியலில் நடிக்கிறார், நானே வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறேன்.
விஜய், தனுஷ் போன்றவர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராக இமானை தூண்டிவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார் அந்த நடிகை. இது ரொம்பவும் அபத்தமானது. எந்த கணவருமே மனைவியின் நடத்தையை பற்றி பொதுவெளியில் பேசமாட்டார்கள். அவருக்கு தலைகுனிவு தான்.
சிவகார்த்திகேயன் பெயரை சீரழிக்க Honey trapping போன்ற விசயங்களை கையாண்டு இருக்க முடியும். இரண்டாம் திருமணம் செய்தஇமான் முதல் மனைவியை தான் விவாகரத்து செய்தாரே தவிர, குழந்தைகளை அல்ல.
கள்ளத்தொடர்பு என்பதெல்லாம் தப்பில்லை என்று கூறும் அந்த நடிகை, குழந்தைகள் அம்மா பேச்சை கேட்டு இமானிடம் பாசம் காட்டவில்லை என்பதை தான் பேட்டியில் கூறியிருக்கிறார்.