அதிகமா கொடுக்கிறேனு சொன்னாங்க அதான் போனேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீரியல் நடிகை ரக்ஷிதா
பிரபல விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தார். இதையடித்து ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜூனியர் சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் போன்ற நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி வந்தார்.
இதன்பின் அந்த தொலைக்காட்சியை விட்டுவிட்டு மீண்டும் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் ஆர்ஜே செந்திலுக்கு ஜோடியாக நடித்தார். நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ரச்சித்தா சீரியலில் இருந்து விலகினார். அங்கிருந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற புது சீரியலில் நடிக்க கமிட்டாகினார்.
இதற்கு என்ன காரணம் விஜய் தொலைக்காட்சி சீரியல் குழுவினருடன் என்ன பிரச்சனை என்று பலர் பலவிதமான செய்திகளை கூறி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து சமீபத்தில் பேசியுள்ளார்.
சீரியலை விட்டு செல்ல பல காரணங்கள் கூறி எழுதுகிறார்கள். உங்களுக்கே (தொகுப்பாளரிடம்) வேறொரு சிறந்த வேலை கிடைத்தால் இங்கிருந்து போவீர்கள் தானே. அப்படி தான் எனக்கும் அங்கு அதிகமாக சம்பளம் கொடுத்து நல்ல பொசிஷன் கொடுத்துள்ளார்கள் அதனால் தான் வேலை பார்க்க போயிருக்கேன்.
இதுபற்றி நிறையபேர் ஏன் இதை செய்கிறாய் என்று கால் செய்து பேசினார்கள். சேனலை விட்டு சேனல் மாறுவது முன்னணி மூத்த நடிகைகள் செய்தால் ஏன் கேட்க மாட்டீர்கள் என்று கூறியுள்ளார் ரச்சித்தா. தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து சீரியலில் நடப்பதை ட்ரோல் செய்வது நான் கண்டுக்கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.