மேடையில் கெட்டவார்த்தையில் திட்டிய கமல் ஹாசன்!! பல ஆண்டு உண்மையை உடைத்த ராதா ரவி
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும், எம் ஆர் ராதாவின் மகனாவும் டாப் இடத்தில் இருந்து வருபவர் நடிகர் ராதா ரவி. வில்லன் நடிகராக கால் பதித்து தற்போது பல படங்களில் குணச்சித்திர ரோலிலும் நடித்து வருகிறார்.
இடையில் அரசியலில் ஈடுபட்டு பிரபல கட்சிக்கு ஆதரவாக மேடை பேச்சாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கமலுக்கும் தனக்கும் ஏற்பட்ட சண்டையை பற்றி பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தின் போது ரெட் போட்டாங்க, அப்போது அனைவரையும் வைத்து ஒரு மீட்டிங்-ஐ வைத்தோம். மீட்டிங்கில் கமல் ஹாசன் வந்து பேசும் போது, சிதம்பர தலைவர் அவர்களே, விஜயகாந்த் அவர்களேன்னு எல்லாரையும் சொல்லிட்டு ராதாரவி அவர்களே என்று மொட்டையாக சொன்னார்.
அதன்பின் நானும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே, புரட்சித்தலைவர் அவர்களே, கமல் ஹாசன் அவர்களே என்றும் சொன்னேன்.நான் குசும்புபிடிச்சவன் ஆச்சே.
இதை பார்த்த கமல், மேடையில் ஏறி பின்னாடி வந்து என் கையை இழுத்து, நாங்க இருவரும் பேசும் போது கெட்ட வார்த்தை பேசுப்போம், நண்பர்கள் தானே.
இங்க வாடா, மயிறு, நான் வெறும் கமல் ஹாசனான்னு கேட்டாரு. அப்போது நானும் வெறும் ராதா ரவியான்னு கேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.