ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கேட்ட அந்த கேள்வி..நான் எதிர்ப்பார்க்கல!! ஓபனாக பேசிய ராதாரவி...

Vijay Gossip Today Radha Ravi Thamizhaga Vetri Kazhagam
By Edward Apr 14, 2026 07:30 AM GMT
Report

ராதாரவி

தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசுபொருளாக மாறியவர் தான் ராதாரவி. நடிகர் விஜய்யுடன் 5க்கும் மேற்பட்ட படங்கள் ராதாரவி நடித்திருக்கிறார்.

குறிப்பாக அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட சர்க்கார் படத்தில் வில்லன் ரோலில் நடித்திருப்பார். அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை ராதாரவி சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கேட்ட அந்த கேள்வி..நான் எதிர்ப்பார்க்கல!! ஓபனாக பேசிய ராதாரவி... | Radha Ravi Reveals Vijay S Surprising Question

விஜய் கேட்ட கேள்வி

அதில், ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய், என்னை தனியாக அழைத்து பேசினார். முதலில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவர், ஒரு விஷயம் கேட்கணும், தப்பா நினைக்க மாட்டீங்களா என்று கேட்டார். அதற்கு நான் சம்மதித்ததும், அவர் கேட்ட கேள்வி எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.

எம்ஜிஆர் மீது நடந்த சூட்டிங் சம்பவத்திற்குப்பின் உங்கள் வீட்டில் என்ன நடந்தது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது, குடும்பத்தில் அந்த சூழ்நிலையை எப்படி சமாளித்தீர்கள் என்று கேட்டார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கேட்ட அந்த கேள்வி..நான் எதிர்ப்பார்க்கல!! ஓபனாக பேசிய ராதாரவி... | Radha Ravi Reveals Vijay S Surprising Question

இதுவரைக்கும் யாரும் இப்படிப்பட்ட கேள்வியை கேட்டதே கிடையாது, யார் தப்பு, உங்கள் அப்பா ஏன் அப்படி பண்ணினார் என்று தான் கேள்விகள் கேட்பார்கள். ஆனால் விஜய் மட்டும் அந்த சம்பவத்தின் மனிதநேய பக்கம் பற்றி கேட்டார்.

விஜய் அப்பவே வித்தியாசமா யோசிப்பார், அவர் ஆரசியலுக்கு வர்றார் என்றதும் அவர் அதற்கு சரியான ஆள்தான் என்று நினைத்தேன் என ராதாரவி தெரிவித்துள்ளார்.