விஜய் முதலமைச்சராவார் என்று அவரே நம்பல..அமைதியா இருக்கக்கூடாது!! நடிகர் ஓபன் டாக்..

Radha Ravi Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Jai Jun 19, 2026 09:45 AM GMT
Report

முன்னணி நடிகராக திகழ்ந்த விஜய் அரசியலுக்கு வந்த 3 ஆண்டுகள் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றும் தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

திராவிட கட்சிகளின் பல தாசாப்தங்களுக்கு புதிய சக்தியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்துள்ளது பலருக்கும் வியப்பில் ஆழ்த்தியது. விஜய் முதலமைச்சரானது குறித்து, மூத்த நடிகர் ராதா ரவி, பேட்டியொன்றில் ஒருசில விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

விஜய் முதலமைச்சராவார் என்று அவரே நம்பல..அமைதியா இருக்கக்கூடாது!! நடிகர் ஓபன் டாக்.. | Radha Ravi Silence Alone Is Not Enough To Vijay Cm

ராதா ரவி

ராதா ரவி கூறுகையில், விஜய் வெற்றி பெற்றது சந்தோஷமான விஷயம். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து மக்கள் ஆதரவால் இந்நிலையை அடைந்திருக்கிறார், ஆனால் இந்தளவுக்கு பெரிய வெற்றியை அவரே எதிர்ப்பார்க்கல என்று நான் நினைக்கிறேன்.

விஜய் எப்போதும் அமைதியான மனிதர், படப்பிடிப்பு தளங்களில்கூட அவர் தேவையில்லாமல் பேசமாட்டார். தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பார். அந்த கேரக்டரை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.

விஜய் முதலமைச்சராவார் என்று அவரே நம்பல..அமைதியா இருக்கக்கூடாது!! நடிகர் ஓபன் டாக்.. | Radha Ravi Silence Alone Is Not Enough To Vijay Cm

அரசியலில் சில சூழ்நிலைகளில் அமைதி மட்டும் போதாது. ஒருவர் நாளை நீங்கள் ஷூட்டிங்கிற்கு வருவீர்களா என்று கேட்டால், ஆமாம் அல்லது இல்லை என்று தெளிவாக சொல்ல வேண்டும், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் அது சரியான தகவலை கொடுக்காது. சில விஷயங்களில் அமைதி நல்லது, ஆனால் சில விஷயங்களில் அது தவறான புரிதலை உருவாக்கும் என்று ராதா ரவி தெரிவித்துள்ளார்.