மேடையில் நடிகை நயன்தாராவை இந்த வாரிசு நடிகரை வைத்து அசிங்கப்படுத்திய ராதாரவி! வைரலாகும் விடியோ..

dmk bjp nayanthara radha ravi
By Jon Mar 31, 2021 06:22 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ராதாரவி. சமீபகாலமாக பெண்களை பற்றி அவதூறாக பேசியதை அடுத்து திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். உடனே திமுகவில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு சென்ற ராதாரவி சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசி வருகிறார்.

சமீபத்தில், அவர் பேசும் போது நடிகை நயன் தாராவை பற்றி நான் எதுவும் பேசவில்லை. அதை ஊடகம் பெரிதாக நான் பேசினேன் என்று எழுதியதால் என்னை திமுக கட்சியில் இருந்து நீக்கினார்கள். நீ என்னடா தூக்குறது நான் பர்மனெண்ட்டா போறேனு கட்சியை விட்டேன் என்று கூறியதோடு, நயன் தாரா என்ன கொள்கை பரப்பு செயலாளரா? என்ன உறவு உனக்கு ! உதயநிதி நயன் தாரா உறவுனா நாங்க என்ன செய்றது என்று அசிங்கமாக பேசி விமர்சித்துள்ளார்.

மேலும், மேடை பக்கத்தில் இருந்த ஒரு பெண் பேசி இருந்ததை பார்த்து கூச்சமில்லாமல் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் ராதாரவி. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடுமையாக விமர்சித்து வருகிறது.