அசிங்கப்படுத்திய உலக நாயகன்.. ஒரே படத்தால் ரஜினி கமலை ஓடவிட்ட ராமராஜன் : ராதா ரவி

Ramarajan Radha Ravi
4 நாட்கள் முன்
Edward

Edward

105 Shares

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்றிருந்த அந்த காலக்கட்டத்தில் அவர்களை ஓரங்கட்டி 100 நாட்களுக்கும் மேல் தன் படத்தினை ஓடவைத்த பெருமை ராமராஜனுக்கு உண்டு.

கரகாட்டகாரன் டூ சாமானியன்

அப்படி 1986ல் நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் ஆரம்பித்து கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களின் வெற்றியை கொண்டாடியவர். நடிகை நளினியை திருமணம் செய்து 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அதன்பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ராமராஜன் பல ஆண்டுகள் கழித்து சாமானியன் என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் மதியழகன் தயாரிப்பில் இய்க்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ராதாரவி, எம் எஸ் பாஸ்கருடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அசிங்கப்படுத்திய உலக நாயகன்.. ஒரே படத்தால் ரஜினி கமலை ஓடவிட்ட ராமராஜன் : ராதா ரவி | Radharavi Open Ramarajan Movies Rajini Kamal

ராதாராவி பேச்சு

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் ராதாராவி, ராமராஜனை பற்றி பல விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில், கரகாட்டக்காரன் படத்தின் போது 100 நாட்களாக ஓடவைத்து ரஜினி, கமல் ஹாசனை பயமுறுத்தியவர் ராமராஜன்.

அப்படத்தினை பார்த்து உலக நாயகன் விமான நிலையத்தில் ராமராஜனை சந்தித்துள்ளார். அப்போது, ராமராஜனின் தலைமுடியை தூக்கி பார்த்து இது உண்மையான முடியா? விக்கா என்று கேட்டு அசிங்கப்படுத்தினாராம். அது உண்மையான முடிதான் என்று கூறினார்.

அப்போது பார்த்த ராமராஜன் தற்போது வரை அதே தலைமுடிதான். ஏன் சொல்றேன் என்றால் இப்போதெல்லாம் சிலர் முடிய ஒட்டிக்கிட்டு வந்துர்றாங்க என்று கலாய்த்து பேசியுள்ளா ராதாரவி.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.