350 கோடி படத்தால் நடுத்தெருக்கு வந்த தயாரிப்பாளர்! பாதி சம்பளத்தை கொடுத்த பாகுபலி நடிகர்..

boxoffice poojahegde radheshayam
By Edward Mar 22, 2022 12:15 PM GMT
Report

சினிமாவில் வெளியாகும் ஒரு படம் தோல்வியை சந்தித்தால் அதை ஈடுகட்ட பல கஷ்டங்களை சந்திப்பது தயாரிப்பாளர் மட்டும் தான். அப்படி பல தயாரிப்பாளர்கள் படங்களின் தோல்வியால் கடன் பிரச்சனை ஏற்பட்டு தற்கொலை செய்தும் உள்ளார்.

அப்படி, பாகுபலி படத்திற்கு பிறகு பிரம்மாண்ட படைப்பில் நடிகர் பிரபாஸ், பூஜாஹெக்டே நடிப்பில் உருவாகி வெளியான படம் ராதேஷ்யாம். பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலீஸான இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. படம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று 350 கோடி செலவிட்டு படத்தினை தயாரித்துள்ளார் தயாரிப்பாளர்.

இப்படத்தினால் சுமார் 100 கோடி அளவில் நஷ்டத்தை கொடுத்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த தயாரிப்பாளரை பிரபாஸ் சந்தித்துள்ளார். படத்தின் மிகப்பெரிய தோல்வியால் கடன் நெருக்கடியில் இருந்த தயாரிப்பாளரை பார்த்த பிரபாஸ், தன்னுடைய சம்பளத்தின் 50 கோடி ரூபாயை கொடுத்துள்ளார்.