இந்த படத்தின் அட்டர் காப்பி தான் ராதே ஷ்யாம்! டைட்டானிக்-லாம் பில்டப் பண்ணீங்க?

hansika poojahegde jeyamravi prabas engeyum kadhal radheshyam
By Edward Mar 04, 2022 06:05 AM GMT
Report

நடிகர் பிரபாஸ், நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராதே ஷ்யாம். 350 கோடி செலவில் தயாரிப்பாலர் புஷன் குமார், வம்சி இணைந்து தயாரித்துள்ளனர். ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று திட்டமிடப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாகவும் தியேட்டர்கள் மூடியதாலும் படம் தள்ளிப்போகியது. இப்படம் வருகிற மார்ச் 11 ஆம் த்ஹேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ள இப்படம் தமிழில் ஜெயம்ரவி, ஹன்சிகா நடிப்பில் பிரபுதேவா இயக்கதில் உருவான எங்கேயும் காதல் படத்தினை போன்றுள்ளது என்று கூறி வருகிறார்கள்.

ஜெயம்ரவி அப்படத்தில் தொழிலதிபரின் மகனாக பணக்கார வீட்டு பையனை சாதாராண குடும்பத்தில் வளர்ந்த பெண் ஹன்சிகா அவரை காதலித்து வருவதை போன்றும் கதை இருக்கும். இதே ராதே ஷ்யாமில் பணக்கார பையன் பிரபாஸ் மிடில் க்ளாஸ் பெண்ணாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார்கள்.

அப்படத்தில் நகரும் காட்சிகளை போன்று தான் ராதே ஷ்யாமில் செல்லும் என்று டைட்டானிக் கப்பலை காட்டினால் டைட்டானிக் படமாகிவிடுமா என்று ரசிகர்கள் படத்தினை கிண்டல் செய்து வருகிறார்கள்.

GalleryGallery