அந்தமாதிரி நடிகை நான் கிடையாது! இயக்குநருக்கு பதிலடி கொடுத்த ரஜினிபட நடிகை..

தமிழ் சினிமாவில் தோனி படத்தின் மூலம் அறிமுகமாகி பாலிவுட்டின் டாப் நடிகையாக களம் கண்டு வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. சித்திரம் பேசுதடி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ராதிகா எந்தமாதிரியான போல்ட் ரோலாக இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் என்றால் நடித்து கொடுத்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் பல படங்களில் ஆடையின்றியும் நடிகருடன் நெருக்கமாக நடித்து சர்ச்சையையும் ஏற்படுத்தினார். இதுகுறித்து அப்படியான ரோலில் நடிக்க இயக்குநர் ஒருவர் ராதிகா ஆப்தேவிடம் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியான ராதிகா ஏன் என்னிடம் இப்படியான கதாபாத்திரத்திரத்தில் நடிக்க அனுகுகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு இயக்குநர், நீங்கள் ஏற்கனவே அப்படி சில படங்களில் நடித்தும் அதுவும் ஆடையின்றியும் நடித்துள்ளார்கள் அதனால் தான் கேட்டேன் என்று கூறியுள்ளார். அதற்கு ராதிகா ஆடையின்றி நடிப்பது என்பது தவறானது இல்லை. கதைக்கு தேவையென்றால் தான் நடித்தேன்.

அதற்காக கண்டபடி கதையை எழுத்தி நடிக்க கேட்டால் எப்படி. அந்தமாதிரி நடிக்க நான் சினிமாவிற்கு வரவில்லை என்றும் கதையே இல்லாமல் வெறும் அப்படி நடிக்க கேட்பது ஏன் என்று கொந்தளித்து பேசியுள்ளார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்