அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்த வாட்ச்!! இத்தனை கோடியாம்..

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant
By Edward Sep 21, 2025 08:52 AM GMT
Report

ராதிகா மெர்ச்சண்ட்

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 18வது இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் பிரமாண்டமான முறையில் பல ஆயிரம் கோடிகள் செலவில் திருமணத்தை நடத்தி முடித்தார்.

ஒரு மாதகாலமாக நடந்த இத்திருமண விழாவில் ராதிகா அணிந்த ஆடை அணிகலன்கள் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. திருமணத்திற்கு பின் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக ராதிகா தற்போது திகழ்ந்து வருகிறார்.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்த வாட்ச்!! இத்தனை கோடியாம்.. | Radhika Merchant Spotted Wearing A Watch Price

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்குநராக அறிமுகமாகி இயக்கிய The Bads Of Bollywood என்ற வெப் தொடரினை இயக்கியுள்ளார்.

இந்த வெப் தொடர் சில நாட்களுக்கு முன் பாலிவுட் பிரபலங்களுக்காக ப்ரீமியர் நிகழ்ச்சி வைக்கப்பட்டது. பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், முகேஷ் அம்பானி - நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி - ஸ்லோகா மெஹ்டா, ராதிகா மெர்ச்சண்ட் கலந்து கொண்டனர். ராதிகா மெர்ச்சண்ட் சிகப்புநிற ஆடையில் மின்னும் முகத்தோற்றத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வாட்ச்

இந்நிகழ்ச்சியில் ராதிகா கட்டிய வாட்ச் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விலையுயர்ந்த Jaeger-LeCoultre Reverso Diamond பிராண்ட் வாட்ச் அணிந்து சென்றுள்ளார். ராதிகா மெர்ச்சண்டின் இந்த வாட்ச், இந்திய மதிப்பில் ரூ. 2.35 கோடி என்று கூறப்படுகிறது.

GalleryGallery