சிம்புவை பெத்தவங்களே அப்படி சொன்னாங்க.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகை ராதிகா..

Silambarasan Radhika Sarathkumar Vendhu Thanindhathu Kaadu
By Edward Nov 14, 2022 07:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. காதல், ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவது என்று இயக்குனர் தயாரிப்பாளர்களிடம் பிரச்சனை என்று சில காலமாக சினிமாவில் ஜொலிக்காமல் இருந்து வந்தார்.

தற்போது மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து தன் இடத்தை பிடித்து வருகிறார். சிம்புவை பற்றி நடிகை ராதிகா வெந்து தணிந்தது காடு படத்தின் 50 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய ராதிகா, சிம்பு வெற்றிப்படங்களுக்காக உழைத்து வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே அவர் டாப் இடத்தில் இருந்திருக்க வேண்டிய நடிகர்.

சில அலட்சியமாக செயல்களால் தன் பெயரை தொலைத்து விட்டு மீண்டும் அதை பிடிக்க கடினமாக உழைத்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும், காதல், பீப் பாடல் என்று சர்ச்சையில் சிக்கி பின் உடல் எடையை குறைத்துள்ளார் சிம்பு. அப்படி இருக்கும் ஒரு சமயத்தில் சிம்புவின் அப்பா, அம்மா என்னிடம் கண்டிக்கும் படி கூறினார்கள். நானும் சிம்புவிடம் பேசி அறிவுரை கூறினேன் என்று ராதிகா கூறியுள்ளார்.