வெளிநாட்டில் செட்டிலாகிய நடிகர் சரத்குமாரின் மகனா இது!! மகனை பிரியாமல் கண்ணீர்விட்டு அழுத நடிகை ராதிகா
Sarathkumar
Radhika Sarathkumar
By Edward
80, 90 களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. சீரியலில் கவனம் செலுத்தி வந்த ராதிகா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சரத்குமாரை காதலித்து மூன்றாம் திருமணம் செய்து கொண்ட ராதிகா இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். மகள் ரியான்னேவை சமீபத்தில் திருமணம் செய்து வைத்து பேரப்பிள்ளைகளை பார்த்து வருகிறார் ராதிகா.
தனது மகன் ராகுல் சரத்குமார் வெளிநாட்டில் விளையாட்டு வீரராக பயிற்சி பெற்று போட்டிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.
சமீபத்தில் மகனை பார்க்க சென்று இந்தியா திரும்பியிருக்கிறார் ராதிகா. மகன் ராகுலை பிரிய முடியாமல் கட்டிப்பிடித்து அழும் வீடியோவை எமோஷ்னலாக பகிர்ந்திருக்கிறார் ராதிகா சரத்குமார்.