60 வயசில் சிகரெட்டுடன் போஸ்! வில்லியாகவே மாறிய நடிகை ராதிகாவின் புகைப்படம்..
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார். இயக்குனர் பாரதிராஜாவால் உருவாக்கப்பட்ட ராதிகா முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு பிரபலமானார்.
தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராதிகா சமீபத்தில் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் அருண் விஜய்க்கு அம்மாவாக நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இதுவரையில் அமைதியான அம்மா, போலிஸ் அம்மா என்று நடித்து வந்த நடிகை ராதிகா சரத்குமார் பாலாஜி குமார் இயக்கி வரும் கொலை படத்திலும் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. அப்படி நடிகை ராதிகா போஸ்டர் வெளியானதை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். கையில் சிகரெட்டுடன் சோபாவில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தபடி முறைத்து பார்க்கும் போஸ் தான் அது.
கிட்டத்தட்ட வில்லி ரோலில் நடிப்பதை போன்ற லுக்கில் ராதிகாவை பார்த்து என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

