மகளை நம்பியும் பிரயோஜனம் இல்ல! மகனை வைத்து காய் நகர்த்தும் ராதிகா-சரத்குமார்..
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் சரத்குமார். சுமார் 136 படங்களுக்கு மேலும் நடித்து வரும் சரத்குமார் தற்போது விஜய்யின் தளபதி66 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தனக்கு பின் தன் வாரிசுகள் சினிமாவில் முக்கிய இடத்தினை பிடிக்க வேண்டும் என்பதற்காக முதல் மனைவியின் மகள் வரலட்சுமி சரத்குமாரை சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் வரலட்சுமி நடித்த படங்கள் நல்ல வரவேற்பு பெறாதாதால் தெலுங்கு பக்கம் சென்றும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதுவரை மகளை பற்றி ஏமாந்தது போதும் என்று நினைத்து தன் இரண்டாம் மனைவி ராதிகா சரத்குமாரின் மகன் ராகுலை சினிமாவில் அறிமுகம் செய்ய துடித்துக்கொண்டிருக்கிறாராம்.
சிங்கபூரில் சினிமா பட்டபடிப்பினை படித்து வந்த ராகுல் சமீபத்தில் பட்டம் பெற்று படிப்பினை முடித்துள்ளார். அந்த கையோடு ராதிகாவும் சரத்குமாரும் மகனை ஒரு படத்தில் களமிரக்க திட்டம் தீட்டி வாய்ப்புகளை தேடி வருகிறார்களாம். அதறு முதல் படியான மணிரத்னத்திடம் ராகுல் ஒரு கதையை உருவாக்கி கூறவுள்ளாராம்.
#NewProfilePic pic.twitter.com/KrdEKn0Cas
— Radikaa Sarathkumar (@realradikaa) May 21, 2022